/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மண்ணெண்ணெய் குண்டு வீசிய வாலிபர் மீது 'குண்டாஸ்'
/
மண்ணெண்ணெய் குண்டு வீசிய வாலிபர் மீது 'குண்டாஸ்'
ADDED : பிப் 16, 2025 03:20 AM
கரூர்: கரூர் அருகே, மளிகை கடை மீது, மண்ணெண்ணெய் குண்டு வீசிய வாலிபரை, குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்-தனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை கருப்ப கவுண்டன்புதுார் கங்கா நகர் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி, 53; இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த, 18ல் இரவு அதே பகுதியை சேர்ந்த முகமது அன்சாரி, 21; குடிபோ-தையில், மளிகை கடைக்கு சென்று சிகரெட் கேட்டார்.ஆனால், சிகரெட் விற்பனை செய்வதில்லை என, மளிகை கடைக்காரர் சுப்பிரமணி கூறியதால், ஆத்திரம் அடைந்த முகமது அன்சாரி சிறிது நேரம் கழித்து, மண்ணெண்ணெய் நிரப்பிய மது பாட்டிலில், தீ வைத்து மளிகை கடைக்குள் வீசி விட்டு தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து, மளிகை கடைக்காரர் சுப்பிரமணி அளித்த புகாரின்-படி தான்தோன்றிமலை போலீசார், முகமது அன்சாரியை கைது செய்து, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். இந்நிலையில், முகமது அன்சாரியை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய, எஸ்.பி., பெரோஸ்கான் அப்துல்லா, கலெக்டர் தங்கவேலுவுக்கு பரிந்துரை செய்தார்.
அதன்படி, முகமது அன்சாரியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய, கலெக்டர் தங்கவேல் உத்தரவிட்டார். இதையடுத்து, திருச்சி மத்திய சிறையில் உள்ள, முகமது அன்சாரியிடம், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை, தான்தோன்றி மலை போலீசார் நேற்று வழங்கினர்.