/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கடைகளில் விளக்க உரையுடன் திருக்குறள் எழுத தொழிலாளர் நலத்துறை தகவல்
/
கடைகளில் விளக்க உரையுடன் திருக்குறள் எழுத தொழிலாளர் நலத்துறை தகவல்
கடைகளில் விளக்க உரையுடன் திருக்குறள் எழுத தொழிலாளர் நலத்துறை தகவல்
கடைகளில் விளக்க உரையுடன் திருக்குறள் எழுத தொழிலாளர் நலத்துறை தகவல்
ADDED : மே 24, 2025 01:36 AM
கரூர் கரூர் மாவட்டத்தில் தனியார் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில் தமிழில் விளக்க உரையுடன், திருக்குறள் எழுத வேண்டும் என, தொழிலாளர் நலத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, கரூர் தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் ராமராஜ் விடுத்துள்ள செய்திக்
குறிப்பு:
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், திருவள்ளுவரின் திருக்குறளை, தினம் ஒரு குறள் என்ற அடிப்படையில், விளக்க உரையுடன், தமிழில் தனியார் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களில், தொழிலாளர்கள் படித்து பயன்பெறும் வகையில் எழுதி காட்சிப்
படுத்த வேண்டும்.
மேலும், கரூர் மாவட்டத்தில் உள்ள வேலை அளிப்போர் அமைப்புகளுக்கும், தொழில் நிறுவனங்களுக்கும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். அனைத்து கடைகளிலும், தமிழில் பெயர்ப்பலகை வைப்பதற்கான கால அவகாசம் கடந்த, 15ல் நிறைவு பெற்றது.
இதனால், தமிழில் பெயர்ப்பலகைகள் வைக்கப்பட்டுள்ளதா
என, ஆய்வு செய்யப்படும். அதில், முரண்பாடுகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது, சட்டவிதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.