/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது பஸ் மோதி கூலி தொழிலாளி பலி
/
பைக் மீது பஸ் மோதி கூலி தொழிலாளி பலி
ADDED : ஜூலை 21, 2025 04:51 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை: கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த மேட்டு மகாதானபுரம் கிராமத்தை சேர்ந்தவர் வீரமலை மகன் மகாதேவன், 20; பழைய இரும்பு கடையில் கூலி தொழிலாளி. இவர், நேற்று காலை, 10:00 மணிக்கு, 'ஹீரோ ஸ்பிளண்டர்' பைக்கில் பெட்டவாய்த்தலையில் நடந்த முப்பூசை விழாவிற்கு சென்றார்.
அப்போது, திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலை, குமாரமங்கலம் தண்ணீர் பந்தல் அருகே திருச்சியில் இருந்து கோயமுத்துார் நோக்கி சென்ற அரசு பஸ், பைக் மீது மோதியதில் சம்பவ இடத்தில் மகாதேவன் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து, குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.