/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சர்க்கரை ஆலையில் மயங்கி விழுந்த கூலி தொழிலாளி பலி
/
சர்க்கரை ஆலையில் மயங்கி விழுந்த கூலி தொழிலாளி பலி
ADDED : ஜூலை 20, 2025 05:27 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், தோட்டக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சுப்பிர-மணியன், 56. இவர், கரூர் அருகே செம்பாடாம்பாளையத்தில் உள்ள, தனியார் சர்க்கரை ஆலையில் கடந்த, 12 ஆண்டுகளாக கூலி தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
கடந்த, 18 மதியம் சுப்பிரமணியம், சர்க்கரை ஆலையில் வேலை செய்து கொண்டிருந்த போது மயங்கி கீழே விழுந்தார். அப்போது, அருகில் இருந்தவர்கள் அவரை, வேலாயுதம்பா-ளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.ஆனால், சுப்பிரமணி சிகிச்சையின் போது உயிரிழந்தார். இதுகு-றித்து, சுப்பிரமணியத்தின் மனைவி நிர்மலா,54, கொடுத்த புகா-ரின்படி, வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.