/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குடிநீர் வசதி இல்லாததே உயிரிழப்புக்கு காரணம்:கரூர் பொதுமக்கள் ஆவேசம்
/
குடிநீர் வசதி இல்லாததே உயிரிழப்புக்கு காரணம்:கரூர் பொதுமக்கள் ஆவேசம்
குடிநீர் வசதி இல்லாததே உயிரிழப்புக்கு காரணம்:கரூர் பொதுமக்கள் ஆவேசம்
குடிநீர் வசதி இல்லாததே உயிரிழப்புக்கு காரணம்:கரூர் பொதுமக்கள் ஆவேசம்
ADDED : செப் 29, 2025 02:04 AM
கரூர்:கரூரில், த.வெ.க., தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் சிக்கி, 40 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு காரணம் போதிய போலீஸ் பாதுகாப்பு, போதுமான குடிநீர் இல்லாததே காரணம் என, அப்பகுதி மக்கள் ஆவேசமாக தெரிவித்தனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில், த.வெ.க., தலைவர் விஜய், நேற்று முன்தினம் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி, 40 பேர் உயிரிழந்தனர். மேலும், 51 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து, அப்பகுதி மக்கள் கூறியதாவது:கே.சோமசுந்தரம், கரூர்:த.வெ.க., தலைவர் விஜய், தன் பிரசாரத்தில் எம்.ஜி.ஆர்., ஆட்சி அமைப்பேன் என்று கூறி வருகிறார். ஆனால், எம்.ஜி.ஆர்., ரசிகர்கள் அனைவரும், அவர் தி.மு.க.,வில் இருந்தபோது அரசியல் வயப்படுத்தப்பட்டனர். ஆனால், விஜய் ரசிகர்கள், இன்னும் அரசியல் வயப்படுத்தவில்லை. இந்த துயர சம்பவத்துக்கு, அரசு மற்றும் த.வெ.க.,வினரே காரணம்.என்.மேகநாதன், கரூர்:எதிர்க்கட்சியோ, ஆளுங்கட்சியோ யாராக இருந்தாலும் சரி, மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டியது அரசின் கடமை. தவறு செய்து விட்டார்கள்.
ஆர்.சந்திரசேகர், கரூர்:முதலில் இந்த சிறிய இடத்தில் பிரசாரம் செய்ய அனுமதி கொடுத்ததே தவறான விஷயம். விஜய் கூட்டத்திற்கு, தண்ணீர் தேவையை யாருமே ஏற்பாடு செய்யவில்லை. தண்ணீர் இருந்திருந்தால், இவ்வளவு உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது. இரண்டாவது, விஜய் கிளம்பி போன பிறகு தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. ஓட்டு இல்லாத சின்ன சின்ன பசங்கள் தான் நிறைய வந்திருந்தனர். இந்த சிக்கலான இடத்தில் பிரசாரம் செய்ய ஏன் அனுமதி கொடுத்தீங்க... இது அரசாங்கத்தின் தவறு.இவ்வாறு அவர்கள் கூறினர்.