/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
/
லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா
ADDED : நவ 04, 2025 01:01 AM
குளித்தலை குளித்தலையில் உள்ள, லட்சுமி நாராயண பெருமாள் கோவில் கும்பாபிேஷக விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
குளித்தலை, முத்து பூபால சமுத்திர அக்ரஹாரம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில், 15 ஆண்டுகளுக்கு பிறகு
கும்பாபிேஷம் நடத்த அப் பகுதி மக்கள் முடிவு செய்தனர்.
இதையடுத்து நேற்று முன்தினம் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டது. பின்னர் புனிதநீர் அடங்கிய கும்பத்தை யாக சாலையில் வைத்து நான்கு கால யாக பூஜைகள் நடந்தன.
நேற்று காலை 9:00 மணியவில் கோபுர கலசத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்து, புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது. அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏராளமானோர் கும்பாபிேஷக விழாவில் சுவாமி தரிசனம் செய்தனர்.

