/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
/
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 04, 2025 01:03 AM
குளித்தலை,  குளித்தலை பஸ் ஸ்டாண்டு  காந்தி சிலை முன், நேற்று காலை  குளித்தலை நகர வி.சி.க., சார்பில் கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
அதில், குளித்தலை  பஸ் ஸ்டாண்ட் போக்குவரத்துக்கு இடையூறாகவும், போதிய அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது. குளித்தலை நகராட்சியின், 24 வார்டுகளிலும் சாக்கடை வசதி, சாலை வசதி, பாசன கண்ணார் தடுப்பு கட்டை முழுவதுமாக உடனடியாக கட்டி முடித்து துார் வார வேண்டும்.
சுகாதார கழிப்பிட கட்டடம் கட்டி பாதியில் இருப்பதை போர்க்கால அடிப்படையில் கட்டி பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
நகர பகுதியில் உள்ள தரமற்ற சாலைகளை அகற்றி விட்டு, புதிய சிமென்ட் சாலை அமைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி, வி.சி., நகர தலைவர் பிரகாஷ் தலைமையில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.