/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அனுமதியின்றி மண் கடத்தல் பொக்லைன் பறிமுதல்
/
அனுமதியின்றி மண் கடத்தல் பொக்லைன் பறிமுதல்
ADDED : செப் 06, 2025 01:23 AM
குளித்தலை, :அனுமதியின்றி மண் கடத்திய, பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டது.
குளித்தலை அடுத்த, குறுதிக்கோன்பட்டி கோரமடை பகுதியில், அரியாறு பாசன பிரிவுக்கு சொந்தமான குளம் உள்ளது. இங்கு அரசு அனுமதியின்றி, பொக்லைன் வாகனம் மூலம் மண் கடத்துவதாக, குளித்தலை உதவி பொறியாளருக்கு தகவல் கிடைத்தது.
நேற்று முன்தினம் மதியம் 3:00 மணியளவில் அலுவலக பணி ஆய்வாளர் சுரேஷ், 51, குளத்தை ஆய்வு மேற்கொண்டார். அப்போது, பொக்லைன் இயந்திரத்தில் உரிய அனுமதி இன்றி, மண் எடுத்து சென்னம்பட்டியை சேர்ந்த முனியப்பன் மகன் பார்த்திபன், 26, என தெரியவந்தது. அதிகாரிகள் வருவதை பார்த்ததும், அவர் எந்த பதிலும் கூறாமல், பொக்லைனை நிறுத்தி விட்டு தப்பினார்.பின்னர் பொக்லைன் பறிமுதல் செய்யப்பட்டு, சிந்தாமணிபட்டி போலீசில் ஒப்படைக்கப்பட்டது. பார்த்திபன் மீது, சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.