/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க நவ.,22 கடைசி நாள்: கலெக்டர்
/
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க நவ.,22 கடைசி நாள்: கலெக்டர்
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க நவ.,22 கடைசி நாள்: கலெக்டர்
அம்பேத்கர் விருதுக்கு விண்ணப்பிக்க நவ.,22 கடைசி நாள்: கலெக்டர்
ADDED : நவ 13, 2024 07:38 AM
கரூர்: 'அம்பேத்கர் விருதுக்கு வரும், 22க்குள் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார். அவர், வெளியிட்ட அறிக்கை:தமிழக அரசு சார்பில் மக்களின் முன்னேற்றத்திற்காக தொண்டு செய்பவருக்கு ஆண்டுதோறும் டாக்டர் அம்பேத்கர் விருது வழங்கப்படுகிறது.
பட்டியலின சமுதாயத்தைச் சார்ந்த மக்களின் சமூக, பொருளாதாரம் மற்றும் கல்வி நிலையை உயர்த்துவதற்கு, வாழ்க்கைத் தரம் உயர பாடுபட்ட ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம். இதற்குரிய விண்ணப்பத்தை, கரூர் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும், 22க்குள் சமர்பிக்க வேண்டும்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.