/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ஓய்வு ஆசிரியரை தாக்கிய வக்கீல் மீது வழக்குப்பதிவு
/
ஓய்வு ஆசிரியரை தாக்கிய வக்கீல் மீது வழக்குப்பதிவு
ADDED : செப் 01, 2025 02:15 AM
குளித்தலை:குளித்தலை, அண்ணா நகரை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற ஆசிரியர் எட்வர்ட் பாஸ்கரன்; இவர், நேற்று முன்தினம் காலை, 7:30 மணிக்கு, வீட்டில் மராமத்து பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, பக்கத்து வீட்டை சேர்ந்த வக்கீல் செல்வராஜ், 44, என்பவர், 'எங்கள் சுவற்றில் ஏன் மராமத்து பணி செய்கிறாய்' என, கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாக மாறியது.
இதில் ஆத்திரமடைந்த வக்கீல் செல்வராஜ், கிரிக்கெட் மட்டையால் எட்வர்ட் பாஸ்கரனை தாக்கி உள்ளார். இதில் காயமடைந்த அவரை மீட்ட குடும்பத்தினர், குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து புகார்படி, குளித்தலை போலீசார், வக்கீல் செல்வராஜ் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதே வழக்கில் வக்கீல் செல்வராஜ் கொடுத்த புகார்படி, ஓய்வு ஆசிரியர் எட்வர்ட் பாஸ்கரன் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.