/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
/
கரூரில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
கரூரில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
கரூரில் வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம்
ADDED : நவ 22, 2024 01:25 AM
கரூரில் வக்கீல்கள் நீதிமன்ற
புறக்கணிப்பு போராட்டம்
கரூர், நவ. 22-
வக்கீல்கள் தொடர்ந்து தாக்கப்படுவதை கண்டித்து, பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி, வக்கீல்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
கரூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், வக்கீல்கள் சங்கம் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்க செயலாளர் நகுல்சாமி தலைமை வகித்தார். ஓசூரில் வக்கீல் கண்ணன் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தும், அவரை தாக்கியவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தியும், வக்கீல் பாதுகாப்பு சட்டத்தை தமிழக அரசும், மத்திய அரசும் உடனடியாக இயற்றிட வேண்டும் என, வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. பின்னர் நீதிமன்ற புறக்கணிப்பில் வக்கீல்கள் ஈடுபட்டனர்.
* கிருஷ்ணராயபுரத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஓசூரில் வக்கீல் மீதான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து, வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வழக்கறிஞர்கள் சங்க தலைவர் செந்தில்குமார், செயலாளர் ரஹமத்துல்லா, மூத்த வழக்கறிஞர் ரமேஷ், துணைத்தலைவர் கிருபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
* இதேபோல், குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, வக்கீல்கள் சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமை வைத்தார். செயலாளர் நாகராஜன், மூத்த வழக்கறிஞர்கள் பாலன், காஜா மொய்தீன் உள்பட பலர் பங்கேற்றனர்.