/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மகளிர் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
/
மகளிர் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மகளிர் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
மகளிர் இன்ஸ்பெக்டரை கண்டித்து வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 20, 2024 12:56 AM
குளித்தலை, டிச. 20-
குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன், நேற்று குளித்தலை, கிருஷ்ணராயபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், மகளிர் இன்ஸ்பெக்டரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
வழக்கறிஞர்கள் சங்க தலைவரும், அரசு வழக்கறிஞருமான சாகுல் ஹமீது தலைமை வகித்தார். செயலாளர் நாகராஜன், பொருளாளர் தமிழ்ச்செல்வன், முன்னாள் அரசு வழக்கறிஞர் கலைச்செல்வன் மற்றும் பலர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில், குளித்தலை மகளிர் இன்ஸ்பெக்டர் கலைவாணியின் விரோத செயல்பாடுகளை வன்மையாக கண்டித்தனர். வக்கீல்களின் மனதை புண்படுத்தும் வகையில், செயல்பட்ட இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, உயர் அதிகாரிகளிடம் மனு அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.