தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தின விழா

மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தின விழா

மாவட்ட மைய நுாலகத்தில் நுாலகர் தின விழா


ADDED : ஆக 14, 2026 06:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 14, 2026 06:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:கரூர் மாவட்ட மைய நுாலகத்தில், வாசகர் வட்டம் சார்பில் நுாலகர் தின விழா நடந்தது.

மாவட்ட நுாலக அலுவலர் சிவக்குமார் தலைமை வகித்தார். தொடர்ந்து, தனியார் கல்விக்குழும முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன் பேசியதாவது:

ஒரு மனிதனின் வாழ்க்கை பயணத்தில், அறிவுக்கு வழிகாட்டும் மிகச் சிறந்த இடம் நுாலகம். அந்த அறிவு கோவிலை பாதுகாத்து, வாசகர்களுக்கு அறிவின் கதவுகளை திறந்து வைக்கும் பணி நுாலகரின் பணியாகும்.

நுால்களை தேடி வரும் ஒவ்வொரு வாசகருக்கும், தேவையான அறிவை தேடிக் கொடுப்பதும், மாணவனின் கனவுக்கு துணை நிற்பதும், இளைஞனின் எதிர்காலத்தை உருவாக்குவதும், சமூகத்தின் அறிவு தரத்தை உயர்த்துவதும் நுாலகரின் பணியாகும். நுாலகம் என்பது வெறும் புத்தகங்கள் வைக்கப்படும் இடம் அல்ல.

அது மக்களின் அறிவு வளர்ச்சிக்கான உயிரோட்டமான மையம் என்பதை, உலகிற்கு உணர்த்தியவர் பத்மஸ்ரீ ரங்கநாதன். இவரது பிறந்த நாளை தேசிய நுாலகர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இவ்வாறு, பேசினார்.

நிகழ்ச்சியில், மாவட்ட மைய நுாலகர் மேரிரோசரி

சாந்தி, மாவட்ட மைய நுாலக வாசகர் வட்ட தலைவர் சங்கர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us