ADDED : ஆக 12, 2025 01:07 AM
கரூர், கரூர் அருகே, குடும்ப பிரச்னை காரணமாக, மனைவியை கொலை செய்த கணவனுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, மாவட்ட கூடுதல் அமர்வு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை பூங்கா நகரை சேர்ந்தவர் சிவசங்கரன், 53; இவருடைய மனைவி சூரியகுமாரி.
கடந்த, 2019ல் ஜூலை, 8ல் சிவசங்கரனுக்கும், சூரிய குமாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சிவசங்கரன், இரும்பு கம்பியால் அடித்து, சூரிய குமாரியை கொலை செய்தார். தான்தோன்றிமலை போலீசார், சிவசங்கரனை கைது செய்து, கரூர் மாவட்ட கூடுதல் அமர்வு மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சூரிய குமாரியை கொலை செய்த குற்றத்திற்காக, சிவசங்கரனுக்கு ஆயுள் தண்டனை மற்றும், 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி தங்கவேல் தீர்ப்பளித்தார். இதையடுத்து சிவசங்கரனை, திருச்சி மத்திய சிறைக்கு போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

