/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை: அரவக்குறிச்சியில் 93 மி.மீ.,
/
கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை: அரவக்குறிச்சியில் 93 மி.மீ.,
கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை: அரவக்குறிச்சியில் 93 மி.மீ.,
கரூர் மாவட்டத்தில் விடிய விடிய மழை: அரவக்குறிச்சியில் 93 மி.மீ.,
ADDED : ஏப் 13, 2025 04:45 AM
கரூர்: தென் மேற்கு மற்றும் அதையொட்டியுள்ள, மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் கடந்த, 10ல் ஆழ்ந்த காற்றழுத்த பகுதி ஏற்பட்டது.
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று மழை பெய்யும் என, சென்னை வானிலை மையம் அறிவித்திருந்-தது.இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு முதல், கரூர் மாவட்-டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று அதிகாலை வரை காற்று, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. மாவட்டத்தில் நேற்று காலை, 8:00 மணி வரை கடந்த, 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு விபரம் (மி.மீ.,):
கரூர், 23.40, அரவக்குறிச்சி, 93, அணைப்பாளையம், 29, க.பர-மத்தி, 11.60, குளித்தலை, 8.20, கிருஷ்ணராயபுரம், 33.50, மாயனுார், 23, பஞ்சப்பட்டி, 4.50, கடவூர், 3, மயிலம்பட்டி, 4 மி.மீ., மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக, 19.43 மி.மீ., மழை பதிவானது.
* லாலாப்பேட்டை, மகாதானபுரம், மகிளிப்பட்டி, புனவாசிப்-பட்டி, கிருஷ்ணராயபுரம், மணவாசி, ஆர்.புதுக்கோட்டை, கட்-டளை, ரெங்கநாதபுரம், பாப்பகாபட்டி, சிவாயம் ஆகிய பகுதி-களில் நேற்று முன்தினம் இரவு காற்றுடன் மழை பெய்தது. சோளம், வெற்றிலை, வாழை, மரவள்ளி கிழங்கு, சின்ன வெங்-காயம் பயிர்களுக்கு மழை நீர் கிடைத்துள்ளது. மழையால் நிலக்க-டலை அறுவடை பணிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
* அரவக்குறிச்சியில் நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு துவங்கிய மழை, 11 மணி வரை நீடித்தது. இதனால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக, வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், அரவக்குறிச்சி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெப்பத்தை தணித்து மழை பெய்ததால், விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.