/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாநகராட்சி பகுதியில் மின் விளக்கு பராமரிப்பு பணி தீவிரம்
/
மாநகராட்சி பகுதியில் மின் விளக்கு பராமரிப்பு பணி தீவிரம்
மாநகராட்சி பகுதியில் மின் விளக்கு பராமரிப்பு பணி தீவிரம்
மாநகராட்சி பகுதியில் மின் விளக்கு பராமரிப்பு பணி தீவிரம்
ADDED : டிச 18, 2024 01:52 AM
கரூர், டிச. 18-
கரூரில் சேதமடைந்த விளக்குகளை, பராமரிப்பு செய்யும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.
கரூர் மாநகராட்சிக்குட்பட்ட ஜவஹர் பஜார், தான்தோன்றிமலை, பசுபதிபாளையம், ஆர்.டி.ஓ., அலுவலக சாலை, கோவை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் விளக்குகள் இரவு நேரத்தில் சரிவர எரிவது இல்லை என, பொதுமக்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்தது. இதுகுறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியாகி
இருந்தது.
மேலும், நேற்று முன்தினம் நடந்த கரூர் மாநகராட்சி கூட்டத்திலும் ஆளும் கட்சியான, தி.மு.க., மற்றும் எதிர்க்கட்சி கவுன்சிலர்களும், இரவு நேரத்தில் சரிவர மின் விளக்குகள் சாலைகளில் எரிவது இல்லை என, புகார் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வர்த்தக நிறுவனங்கள் நிறைந்த ஜவஹர் பஜார் உள்ளிட்ட பல பகுதிகளில் சேதம் அடைந்து காணப்பட்ட, எரியாத மின் விளக்குகளை பராமரிக்கும் பணியில், ஊழியர்கள்
ஈடுபட்டனர்.