/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வெள்ளியணை அருகே ரயில்வே குகை வழிப்பாதையில் எரியாத விளக்குகள்
/
வெள்ளியணை அருகே ரயில்வே குகை வழிப்பாதையில் எரியாத விளக்குகள்
வெள்ளியணை அருகே ரயில்வே குகை வழிப்பாதையில் எரியாத விளக்குகள்
வெள்ளியணை அருகே ரயில்வே குகை வழிப்பாதையில் எரியாத விளக்குகள்
ADDED : செப் 27, 2025 01:17 AM
கரூர், வெள்ளியணை அருகே, ரயில்வே குகை வழிப்பாதையில் விளக்குகள் எரியாமல் உள்ளதால், பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
கரூர்-திண்டுக்கல் ரயில்வே இருப்பு பாதையின் கீழ், வெள்ளி யணை அருகே சின்னம நாயக்கன்பட்டி பிரிவில் இருந்து, கத்தாளப்பட்டி புதுார் சாலையில், குகை வழிப்பாதை உள்ளது.
அதன் வழியாக, 25க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக, செல்லி பாளையம், கத்தாளப்பட்டி, கொங்கு நகர், புதுார், சின்னதம்பி பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள், ரயில்வே குகை வழிப்பாதை வழியாக டூவீலர் மற்றும் கார்களில் செல்கின்றனர். இந்நிலையில் ரயில்வே குகை வழிப்பாதையில், அமைக்கப்பட்டுள்ள பெரும்பாலான விளக்குகள் எரியாமல், சேதமடைந்த நிலையில் உள்ளது.
இதனால், அந்த வழியாக இரவு நேரத்தில் செல்லும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். மேலும், குகை வழிப்பாதையை சுற்றியுள்ள காலி இடங்களில், சமூக விரோதிகள் இரவு நேரத்தில் மது அருந்தும் செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, குகை வழிப்பாதையில், எரியாத விளக்குகளை எரிய வைக்கும் வகையில், ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.