/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கொசுவலை இறக்குமதிக்கு கட்டுப்பாடு உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
/
கொசுவலை இறக்குமதிக்கு கட்டுப்பாடு உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
கொசுவலை இறக்குமதிக்கு கட்டுப்பாடு உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
கொசுவலை இறக்குமதிக்கு கட்டுப்பாடு உள்ளூர் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
ADDED : நவ 29, 2024 01:19 AM
கரூர், நவ. 29-
கொசுவலை இறக்குமதிக்கு, கடும் கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என, உள்ளூர் உறற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
கரூரில், ஜவுளி தொழிலுக்கு அடுத்தபடியாக மத்திய, மாநில அரசுகளுக்கு வருவாய் ஈட்டித் தர கூடியதாக இருந்து வந்தது பாரம்பரிய கொசுவலை உற்பத்தி தொழில். இங்கிருந்து மேற்குவங்கம், உத்தரப்பிரதேசம், குஜராத், பீஹார், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களுக்கு அதிகளவிலும், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆண்டுக்கு, 40 கோடி ரூபாய் வரை கரூரில் கொசு வலை மூலம் வர்த்தகம்
நடந்தது.
தொழிலில் நேரடியாக, 20 ஆயிரம் பேரும், மறைமுகமாக, 15 ஆயிரம் பேருக்கும் வேலை வாய்ப்பை அளிக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக, தொழிலில் சுணக்கம் ஏற்பட்டு மிகவும் சிரமப்பட்டு தொழில் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக வெளிநாடுகளில் இருந்து, இறக்குமதிக்கு கடும் கட்டுப்பாடு விதித்தால், உள்ளூரில் கொசுவலை உற்பத்தி மறுமலர்ச்சி பெறும் வாய்ப்பு உள்ளது.
இது குறித்து, கரூர் பாரம்பரிய கொசுவலை உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் ஆர்.குப்புராவ் கூறியதாவது:
உள்நாட்டு தொழில் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கில், 20 சதவீதம் சுங்கவரி இறக்குமதி செய்யப்படும் கொசுவலைகளுக்கு விதிக்கப்பட்டு வந்தது. 2012ம் ஆண்டு வங்கதேசம், இலங்கை உள்பட சார்க் நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் போடப்பட்டது. இதனால் வங்கதேசம் மட்டுமின்றி சீனா, தைவான் போன்ற நாடுகளில் இருந்தும் கொசுவலைகள் மிககுறைந்த விலைக்கு இறக்குமதி செய்யப்பட்டு வந்தது. உள்நாட்டு கொசுவலை உற்பத்தி பாதிக்கப்பட்டது.
இந்த பிரச்னை குறித்து, பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை வாயிலாக, மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்பட்டது. அடக்கவிலை ஒரு கிலோ, 3.5 டாலர் (300 ரூபாய்) குறைவான கொசுவலைகளை வெளி நாட்டிலிருந்து இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தடையிலிருந்து தப்பிக்கும் வகையில், 3.6 டாலராக பில் செய்து இறக்குமதி செய்கின்றனர். தைவானில் இருந்து மாதம்தோறும், 450 டன் இறக்குமதியாகிறது.
கலவரம் ஓய்ந்தால் வங்கதேசத்திலிருந்து வரும் வாய்ப்பு அதிகம். இதனால், நமது நாட்டில் உற்பத்தியாகும் கொசுவலைகளை, விற்பதில் சிரமப்பட வேண்டியுள்ளது. உலக சுகாதார மையம் மூலமாக, ஏற்றுமதியாகி வந்த மருந்து கலந்த கொசுவலை துணிகள் ஆர்டரும், இரண்டு ஆண்டுகளாக குறைந்து விட்டது. உற்பத்தியாளர்கள் தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க முடியாமலும், வங்கியில் பெற்ற கடன்களின் தவணைகளை செலுத்த முடியாமலும் திணறி வருகின்றனர். உலக சுகாதார மையம் மூலம், கொள்முதல் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிநாடுகளிருந்து இருந்து கொசுவலை இறக்குமதிக்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும்
இவ்வாறு கூறினார்.