/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை நீதிமன்றத்தில் லோக் அதாலத் முகாம்
/
குளித்தலை நீதிமன்றத்தில் லோக் அதாலத் முகாம்
ADDED : டிச 15, 2024 01:19 AM
குளித்தலை, டிச. 15-
குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில், நேற்று காலை லோக் அதாலத் முகாம் நடைபெற்றது.
சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தமிழரசி, குற்றவியல் நடுவர் எண்-1 நீதிபதி பிரகதீஸ்வரன், குற்றவியல் நடுவர் எண்-2 நீதிபதி சசிகலா, குளித்தலை வழக்கறிஞர் சங்க தலைவரும், அரசு வழக்கறிஞருமான சாகுல் அமீது, செயலாளர் நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
வாகன விபத்தில் மரணமடைந்த குடும்பத்தாருக்கு, விபத்து நிவாரண நிதிக்கான காசோலையை, சார்பு நீதிமன்ற நீதிபதி முத்துசாமி வழங்கினார். முகாமில் வழக்கறிஞர்கள், நீதிமன்ற அலுவலர்கள், பணியாளர்கள், வழக்கறிஞரின் உதவியாளர்கள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.