ADDED : ஜூலை 15, 2025 01:20 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை,  குளித்தலை அடுத்த, நச்சலுார் பகுதியில் லாட்டரி டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக, நங்கவரம் போலீசாருக்கு வந்த தகவல்படி, நேற்று முன்தினம் மாலை 5:00 மணியளவில் கடை வீதியில் எஸ்.ஐ., கந்தசாமி மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது திருச்சி இனாம்புலியூர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணியன், 56, இனுங்கூர்  மேற்கு தெரு ராஜீவ் கண்ணன், 42, ஆகியோர் ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனை செய்தனர். அவர்களிடம் இருந்து 13 லாட்டரி டிக்கெட் மற்றும் 260 ரூபாய் பறிமுதல் செய்து, கைது செய்தனர்.

