sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு வரவேற்பு கரூரில் இன்று மகா ஆரத்தி

/

காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு வரவேற்பு கரூரில் இன்று மகா ஆரத்தி

காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு வரவேற்பு கரூரில் இன்று மகா ஆரத்தி

காவிரி விழிப்புணர்வு ரத யாத்திரைக்கு வரவேற்பு கரூரில் இன்று மகா ஆரத்தி


ADDED : நவ 04, 2024 05:08 AM

Google News

ADDED : நவ 04, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூரில், காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரைக்கு வர-வேற்பளிக்கப்பட்டு, வழிபாடு நடந்தது. காவிரி அம்மன் நகர்-வலம் மற்றும் அதனை தொடர்ந்து நெரூரில் காவிரி மகா ஆரத்தி விழா, இன்று நடக்கிறது.

அகில பாரதீய சந்நியாசிகள் சங்கம், அன்னை காவிரி நதி நீர் பாது-காப்பு அறக்கட்டளை சார்பில் காவிரி நதியை துாய்மையாக வைத்துக்கொள்ள வேண்டியதன் அவசியத்தை மக்களிடம் கொண்டு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கடந்த, 14 ஆண்டுளாக அன்னை காவிரி விழிப்புணர்வு துலா தீர்த்த ரத யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. கர்நாடகா மாநிலம் குடகு-மலை தலை காவிரியில் இருந்து, 7 கலசங்களில் எடுக்கப்பட்ட காவிரி துலா தீர்த்த ரத யாத்திரை, சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில், கடந்த அக்., 20ல் தொடங்கியது. ரதத்துடன், 14க்கும் மேற்பட்ட சந்நியாசிகள் பயணம் செய்கின்றனர். பல்-வேறு மாவட்டங்கள் வழியாக ஈரோடு மாவட்டம் கொடுமுடியை யாத்திரை, நேற்று வந்தடைந்தது.கரூர் மாவட்டத்திற்கு, நேற்று காலை வந்த ரத யாத்திரைக்கு கரூர் முனியப்பன் கோவில் முன்பு வரவேற்பளிக்கப்பட்டது. கரூர் ரவி-சங்கர்ஜி வாழும் மையம், கரூர் பசுமடம், கரூர் காந்தி நகர், பசுப-திபாளையம் ஆகிய இடங்களில் வரவேற்பளிக்கப்பட்டு வழி-பாடு நடந்தது.இன்று மதியம், 3:00 மணிக்கு காவிரி அம்மன் நகர்வலம், கரூர் கல்யாண பசுதீஸ்வரர் சுவாமி கோவில் முன் பால்குடம், கோலாட்டத்துடன் தொடங்கி, கரூர் கோடீஸ்வரர் சுவாமி கோவில் வரை நடக்கும். மாலை, 6:00 மணிக்கு கரூர் காவிரி மகா ஆரத்தி பெருவிழா அகில பாரதீய சந்நியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்தா மகராஜ் தலைமையில், கரூர் காவிரி குடும்பம், கரூர் அனைத்து ஆன்மிக அமைப்புகள் சார்பில், நெரூர் சதாசிவ பிரமேந்திராள் அதிஷ்டானம் காவிரி படித்து-றையில் நடக்கிறது.

முன்னதாக, கரூர் காவிரி குடும்பம் மாதாஜி சிவகற்பகாம்பாள், கரூர் மாவட்ட பொறுப்பாளர் சங்கர சரஸ்வதி ஸ்வாமிகள் ஆகியோர் ஏற்பாடுகளை செய்துள்ளனர். நவ., 13ல் மயிலாடு-துறை மாவட்டம் பூம்புகாரில் தலைகாவிரியில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித தீர்த்தம் கடலில் விசர்ஜனம் செய்யப்பட்டு யாத்-திரை நிறைவடைகிறது.






      Dinamalar
      Follow us