/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ராஜகாளியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா
/
ராஜகாளியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா
ADDED : மார் 25, 2024 07:03 AM
அரவக்குறிச்சி : கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த ஈசநத்தம் அருகே, பெத்தாச்சி நகர் ராஜீவ் காந்தி நகர் பகுதியில் புதுப்பிக்கப்பட்ட ராஜகாளியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது.
விழாவையொட்டி, அதிகாலை முதல் சிவாச்சாரியார்கள் யாக வேள்வியில் புனித நீர் வைத்து வேத மந்திரங்களை முழங்கி பூஜை செய்தனர். பின், கும்பாபிஷேக விழா கமிட்டியினர் புனித நீரை தலையில் சுமந்து கோவில் கோபுரத்திற்கு எடுத்துச்சென்றனர். கோபுரத்தில் உள்ள கலசங்களுக்கு பூஜை செய்த சிவாச்சாரியார்கள், புனித நீரை ஊற்றி அபிஷேகம் செய்தனர். பின், மகா தீபாராதனை காட்டப்பட்டு பூஜைகள் நிறைவடைந்தன. விழாவில், ஈசநத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

