/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அரவக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
/
அரவக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரவக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
அரவக்குறிச்சி அரசு கலை கல்லுாரியில் மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஏப் 27, 2025 04:47 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி கலை அறிவியல் கல்லுாரியில், உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
உலக மலேரியா விழிப்புணர்வு தினம், ஆண்டுதோறும் ஏப்., 25ல் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நாள், மலேரியா நோயை கட்டுப்படுத்துவதற்கும், ஒழிப்பதற்கும் விழிப்புணர்வை ஏற்ப-டுத்தும் ஒரு முக்கியமான நாளாகும். மலேரியா காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அதனை கட்டுப்படுத்தவும் உலக சுகாதார அமைப்பு இந்த நாளை அறிவித்தது.இந்நிலையில், உலக மலேரியா தினத்தை முன்னிட்டு, அரவக்கு-றிச்சி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நேற்று முன்தினம், விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில், கல்லுாரி மாணவ மாண-வியருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், அரவக்குறிச்சி சுகாதார துறையில் பணியாற்றி வரும் சுகாதார ஆய்வாளர்கள் நிர்மல், டேனியல் மற்றும் குழந்தைவேல் ஆகியோர் பேசினர். அவர்கள், மலேரியாவால் ஏற்படும் ஆபத்துகள், அறிகுறிகள், தடுப்பு முறைகள் குறித்து விரிவாக விளக்கம் அளித்தனர்.
மேலும், மலேரியா நோயை ஒழிக்க அரசு, தனியார் நிறுவ-னங்கள் இணைந்து செயல்பட வேண்டும். மலேரியாவை ஒழிக்க சமூக பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும் என, விழிப்பு-ணர்வை ஏற்படுத்தினர்.
கல்லுாரி முதல்வர் வசந்தி தலைமை வகித்தார். ஏற்பாடுகளை, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் காளீஸ்வரி செய்திருந்தார். முடிவில், மலேரியா பரவுவதை தடுக்கும் பொருட்டு, உறுதி-மொழி ஏற்றுக்கொண்டனர்.

