/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி ஆற்றில் ஒதுங்கிய ஆண் சடலம்
/
அமராவதி ஆற்றில் ஒதுங்கிய ஆண் சடலம்
ADDED : ஜூலை 15, 2025 01:44 AM
கரூர், கரூர் அருகே, அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில் ஒதுங்கிய, ஆண் உடலை நேற்று இரவு தீயணைப்பு துறை வீரர்கள் மீட்டனர்.
கரூர்-மதுரை தேசிய நெடுஞ்சாலை சுக்காலியூர் செக்போஸ்ட், அமராவதி ஆற்றின் கரையோர பகுதியில், 45 வயதுடைய ஆண் உடல் ஒதுங்கியுள்ளதாக, அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று இரவு போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து, கரூர் தீயணைப்பு துறை வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, ஆண் உடலை மீட்டனர். பிறகு, போலீசார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தவர், ஆட்டையாம்பரப்பு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் என, தெரிய வந்தது. இதையடுத்து, செந்தில்குமார் தவறி ஆற்றில் விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என, பசுபதிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.