/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரும் 23ல் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம்
/
வரும் 23ல் ஆண்களுக்கான கருத்தடை சிகிச்சை முகாம்
ADDED : பிப் 21, 2024 01:27 AM
கரூர்:குளித்தலை அரசு மருத்துவமனையில், ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகி ச்சை முகாம் வரும், 23 ல் நடக்கிறது.
இதுகுறித்து, ஊரக நலப் பணிகள் துணை இயக்குநர் சுபிலா வெளியிட்ட அறிக்கை:
கரூர்
மாவட்டம், குளித்தலை அரசு மருத்துவமனையில், ஆண்களுக்கான கருத்தடை
சிகிச்சை முகாம் வரும், 23 ல் நடக்கிறது. சிகிச்சை முறையை
ஏற்றுக்கொள்ளும் ஆண்களுக்கு, ஊக்கத்தொகையாக, 1,100 ரூபாய்,
ஊக்குவிப்பாளர்களுக்கு, 200 ரூபாயும் வழங்கப்படுகிறது.
மேலும்,
கரூர் அலுவலகம் மூலம் பங்களிப்பு, 3,900 என பயனாளிகளுக்கு
மொத்தம், 5,000 ரூபாய் வழங்கப்படும் அல்லது, 1,100 ரூபாய் மட்டும்
பெறும் பயனாளிகளுக்கு, கலெக்டர் அலுவலகம் மூலம், ஒரு நலத்திட்ட உதவி
வழங்கப்படும். விருப்பம் உள்ள ஆண்கள் நவீன குடும்ப நல கருத்தடை செய்து
கொண்டு பயன் பெறலாம்.இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

