/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலை அரசு மருத்துவமனையில் பழுதாகியுள்ள மோனோ கிராம் கருவி
/
குளித்தலை அரசு மருத்துவமனையில் பழுதாகியுள்ள மோனோ கிராம் கருவி
குளித்தலை அரசு மருத்துவமனையில் பழுதாகியுள்ள மோனோ கிராம் கருவி
குளித்தலை அரசு மருத்துவமனையில் பழுதாகியுள்ள மோனோ கிராம் கருவி
ADDED : ஜூன் 19, 2024 06:40 AM
குளித்தலை : குளித்தலை அரசு மருத்துவமனையில், பழுதாகியுள்ள மோனோ கிராம் கருவியை சரி செய்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்.குளித்தலை, மாவட்ட தலைமை மருத்துவமனை யில் தினமும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வருகின்றனர்.
இதுதவிர நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்குவோரும் சிகிச்சைக்கு வருகின்றனர். திருச்சி மாவட்டம், முசிறி, காட்டுப்புத்துார், தொட்டியம், கொளக்குடி, பவுத்திரம் பகுதியில் இருந்தும் பெண்கள் பிரசவத்திற்காக இங்கு சிகிச்சைக்கு வருகின்றனர்.பெண்களுக்கு மார்பக புற்றுநோய் பாதிப்புகளை கண்டறிந்து தொடர் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், கடந்த எட்டு மாதங்களுக்கு மேலாக மார்பக புற்றுநோய் கண்டுபிடிக்கும் மோனோ கிராம் கருவியில் பழுது ஏற்பட்டுள்ளது. இதனால் தனியார் மருத்துவமனை அல்லது திருச்சி, கரூர் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் பெண்கள் நலன் கருதி, மார்பக புற்றுறோய் கண்டறியும் மோனோ கிராம் கருவியை சரி செய்து, மீண்டும் பயன்பாட்டுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.