/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
/
கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தவர் கைது
ADDED : மே 26, 2025 04:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் அருகே, வாலிபரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்-தவர் கைது செய்யப்பட்டார்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியை சேர்ந்தவர் முருகன், 37; இவர், நேற்று முன்தினம் ராமானுார் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அந்த வழியாக வந்த, சணப்பிரட்டி தொழிற்பேட்டை பகுதியை சேர்ந்த அன்பரசன், 23, என்பவர், மது அருந்த பணம் கேட்-டுள்ளார். முருகன் கொடுக்க மறுத்த நிலையில், கத்தியை காட்டி மிரட்டி பணத்தை பறித்து சென்றுள்ளார். இதுகுறித்து முருகன் அளித்த புகார்படி, பசுபதிபாளையம் போலீசார், அன்பரசனை கைது செய்தனர்.