/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
/
வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றவர் கைது
ADDED : ஜூன் 21, 2025 01:04 AM
கரூர்,  கரூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர். கரூர் மாவட்டம், ஜெகதாபி பகுதியை சேர்ந்தவர் முருகேசன், 50; இவர் கடந்த, 19ல் வீட்டை பூட்டி விட்டு, கரூர் காந்தி கிராமத்தில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.
அப்போது, வீட்டின் பூட்டை உடைத்து எஸ்.வெள்ளாளப்பட்டியை சேர்ந்த நவீன் குமார், 25; ஜோதிவடத்தை சேர்ந்த கோபால கிருஷ்ணன், 25; ஆகியோர், திருட முயன்றுள்ளனர். அதை பார்த்த, அந்த பகுதியை சேர்ந்த பொது மக்கள் நவீன் குமாரை மட்டும் பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர்.கோபால கிருஷ்ணன் தப்பி விட்டார். இதையடுத்து, வெள்ளியணை போலீசார் நவீன் குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.

