/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரயில்வே கேட் ரோப் கயிறு திருட முயன்றவர் கைது
/
ரயில்வே கேட் ரோப் கயிறு திருட முயன்றவர் கைது
ADDED : ஜூன் 26, 2025 01:42 AM
கிருஷ்ணராயபுரம், மாயனுார் ரயில்வே கேட்டின், ரோப் கயிறு திருட முயன்ற வடமாநில இளைஞரை, பொது மக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
மாயனுாரில் ரயில்வே கேட் உள்ளது. இதன் வழியாக, ரயில்கள் செல்லும் போது மாயனுார் கேட் மூடப்படுகிறது. இந்நிலையில், நேற்று மாலை வட மாநில இளைஞர் ஒருவர், ரயில்வே கேட் அருகில் இருந்த, ரோப் இரும்பு கயிறை திருட முயற்சி செய்தார். அப்போது, அந்த வழியாக சென்ற பொது மக்கள், ரோப் கயிறு திருடனை பிடித்து விசாரித்தனர். பின்னர், கரூர் ரயில்வே போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டு, வடமாநில இளைஞரை ஒப்படைத்தனர்.
ரயில்வே கேட் திறந்து மூடும் ரோப் கயிறு, அறுக்கப்பட்டதால் ரயில்வே கேட் மூடப்பட்டது. இதனால், மாயனுார் கதவணை வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல், மக்கள் அவதிப்பட்டனர். இதனால் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. புதிய ரோப் அமைக்கும் பணிகளில் ரயில்வே நிர்வாகம்
ஈடுபட்டது.