25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு
25 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : ஆக 26, 2026 05:14 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி; சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே, வேம்ப-னேரி பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துரைசாமி மகன் நாகராஜ், 35. இவர், சின்ன
தாராபுரம் அருகே உள்ள சி.கூடலுார் பகுதியில் செயல்படும் பால் குடோனில், இரும்பு கூரை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.
25 அடி உயரத்தில் நின்று வேலை செய்துகொண்டிருந்த-தபோது, நாகராஜ் தவறி கீழே விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, உடனடியாக கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோ-தித்த மருத்துவர்கள், நாகராஜ் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து நாகராஜ் மனைவி ஈஸ்வரி அளித்த புகார்படி, சின்னதாராபுரம்
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
