/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
/
டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழப்பு
ADDED : டிச 26, 2024 03:03 AM
அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, டாஸ்மாக் கடை அருகே டூவீலரில் இருந்து தவறி விழுந்தவர் உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி அடுத்த நம்பாகவுண்டனுார் அருகே உள்ள, வாய்க்கால் ஊர் பகுதியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 45. இவர், அரவக்குறிச்சியில் இருந்து ராஜபுரம் செல்லும் சாலையில், அவ-ரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். வாகனத்தை வேகமாக இயக்கியதால், டாஸ்மாக் கடை அருகே சென்றபோது நிலை தடு-மாறி கீழே விழுந்தார்.
இதில், பாலகிருஷ்ணனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு, கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். இதில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அரவக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.