/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில் மேலாண்மைத்துறை வழிகாட்டுதல் நிகழ்ச்சி

ADDED : ஜூலை 14, 2025 03:54 AM
கரூர்: கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லுாரியில், 'மேலாண்மைத்-துறை மூலம் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கவும்' என்ற தலைப்பில் ஒருநாள் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், கல்லுாரி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார்.
நேர்மறையான மனப்பான்மையை ஊக்குவித்தல், வெற்றிக்கான முதல்படி என்ற தலைப்பில் நுண்ணறிவுகளை வழங்கிய முன்னாள் மாணவி நிவேதிதா பேசினார். இன்றைய போட்டி சூழலில் வெற்றி சார்ந்த மனநிலையை வளர்ப்பது மற்றும் வலு-வான தனிப்பட்ட அடித்தளத்தை உருவாக்குவதன் முக்கியத்து-வத்தை வலியுறுத்தினார்.மேலும், பல்வேறு துறைகளை சேர்ந்த இளங்கலை மாணவர்க-ளுக்கு மேலாண்மைத்துறை படிப்பதன் மதிப்பையும், அது அவர்-களின் தொழில்முறை பயணத்தை வடிவமைப்பதில் எவ்வாறு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளிக்கும் என்பதையும் புரிந்து-கொள்ள ஒரு சிறந்த தளமாக அமைந்தது.
இணை செயலாளர் சரண்குமார், நிர்வாக இயக்குனர் குப்புசாமி, முதல்வர் முருகன் உள்பட பலர் பங்கேற்றனர்.