/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அடிப்படை வசதி இல்லாத மண்மங்கலம் தாலுகா ஆபீஸ்
/
அடிப்படை வசதி இல்லாத மண்மங்கலம் தாலுகா ஆபீஸ்
ADDED : டிச 29, 2025 07:31 AM
கரூர்: பயணியர் நிழற்கூடம் உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாத இடத்தில், மண்மங்கலம் தாலுகா அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரூர் தாலுகாவில் இருந்து, மண்மங்கலம் தாலுகா, கடந்த, எட்டு ஆண்டுகளுக்கு முன் தனி-யாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. துவக்-கத்தில், கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில், மண்மங்கலம் பஸ் ஸ்டாப்பில் தனியார் கட்ட-டத்தில், தாலுகா அலுவலகம் செயல்பட்டது.பிறகு, மண்மங்கலத்தில் சொந்த கட்டடத்தில் தற்போது தாலுகா அலுவலகம் செயல்பட்டு வரு-கிறது. ஆனால், சேலம் தேசிய நெடுஞ்சா-லையில் இருந்து, அரை கிலோ கிலோ மீட்டர் துாரத்தில் மண்மங்கலம் தாலுகா அலுவலகம் உள்ளது.
கடந்த, 2023ல் மண் சாலை தார்சாலையாக மாற்றி அமைக்கப்பட்டது. மேலும், தாலுகா அலு-வலகம் செல்லும் சாலையில், மின் விளக்கு வசதி, பயணியர் நிழற்கூடம் உள்ளிட்ட வசதிகள் இல்லை. தற்போது, தாலுகா அலுவலக நுழைவு வாயிலில், பஸ் ஸ்டாப் அமைக்கப்பட்டுள்ள இடத்தில், நிழற்கூடம் இல்லை. வாங்கல், நன்-னியூர் உள்ளிட்ட பகுதிகளில் செல்லும் பொது மக்கள், மண்மங்கலம் பஸ் ஸ்டாப்பில் இறங்கி, தாலுகா அலுவலகத்துக்கு நடந்து செல்ல வேண்-டிய நிலை உள்ளது.
தாலுகா அலுவலகம், சொந்த கட்டடத்தில் செயல்பட துவங்கி, எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், பயணிகள் நிழற்கூடம் உள்ளிட்ட அடிப்-படை வசதிகளை செய்யாமல், கரூர் மாவட்ட நிர்வாகம் காலம் தாழ்த்தி வருகிறது. இதனால், பொதுமக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வரு-கின்றனர். எனவே, மண்மங்கலம் தாலுகா அலு-வலக நுழைவு வாயிலில், நிழற்கூடம் மற்றும் மின் விளக்கு வசதிகளை ஏற்படுத்தி தர, கரூர் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க
வேண்டும்.

