/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் வரும் 9ல் மாரத்தான், வாக்கத்தான் போட்டி
/
கரூரில் வரும் 9ல் மாரத்தான், வாக்கத்தான் போட்டி
ADDED : நவ 01, 2025 01:21 AM
கரூர், கரூர் மாவட்ட சி.ஐ.ஐ., யங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில், கரூர் விஷன், 2030 என்ற தலைப்பில் வரும், 9ல் மாரத்தான் மற்றும் வாக் கத்தான் போட்டி நடக்கிறது.
அதில், 10 கி.மீ., 5 கி.மீ., மாரத்தான் போட்டிகளில் ஆண்களும், பெண்களும் பங்கு பெறலாம். சிறுவர், சிறுமியருக்கு 5 கி.மீ., மாரத்தான் போட்டி நடத்தப்படுகிறது. 3 கி.மீ., வாக்கத்தான் போட்டி, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடத்தப்படுகிறது.
வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசாக, 10 ஆயிரம் ரூபாய், இரண்டாம் பரிசாக, 5,000 ரூபாய், மூன்றாம் பரிசாக, 3,000 ரூபாய், கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். நான்காம் பரிசாக கோப்பை, சான்று மட்டும் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்பவர்களுக்கு, டி-சர்ட் இலவசமாக வழங்கப்படும். போட்டிகளில் பங்கேற்க பெயர்களை பதிவு செய்ய, நாளை (2ம் தேதி) கடைசி நாள்.
திருவள்ளுவர் மைதானத்தில் இருந்து தொடங்கும் மாரத்தான், வாக்கத்தான் போட்டிகள் வரும், 9 ல் காலை, 5:30 மணி முதல், 7:30 மணி வரை நடக்கிறது. போட்டிகளை, கரூர் தி.மு.க., எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து, 9:00 மணிக்கு கரூர் அட்லஸ் கலையரங்கில் கரூர், 2030 விஷன் தொடர்பான கருத்தரங்கம் நடக்கிறது.
அதில், எம்.எல்.ஏ., செந்தில் பாலாஜி, தொழில் அதிபர்கள் நாகராஜன், தேவராஜன், ேஹமலதா, சந்தோஷ் முருகானந்தம் மற்றும் தொழில் முனைவோர்கள் பங்கேற்கின்றனர்.

