/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செழிப்புடன் மரவள்ளி கிழங்கு
/
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செழிப்புடன் மரவள்ளி கிழங்கு
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செழிப்புடன் மரவள்ளி கிழங்கு
கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் செழிப்புடன் மரவள்ளி கிழங்கு
ADDED : செப் 30, 2024 06:35 AM
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், மரவள்ளி கிழங்கு செடிகள் செழிப்பாக வளர்ந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த வரகூர், குழந்தைப்பட்டி, சிவாயம், பாப்பகாப்பட்டி, கந்தன்குடி, வேப்பங்குடி, புனவாசிப்பட்டி, அந்தரப்பட்டி, மகிளிப்பட்டி ஆகிய இடங்களில் விவசாயிகள் பரவலாக மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்து வருகின்றனர். கிழங்கு சாகுபடிக்கு தேவையான தண்ணீர் கிணற்று நீர் பாசன முறையில் பாய்ச்சப்படுகிறது. தற்போது செடிகள் வளர்ந்து வரும் நிலையில், போதிய மழை இல்லாததால் செடிகள் வளர்ச்சிக்கு பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக பரவலாக லேசான மழை பெய்து வருகிறது. இதனால் மரவள்ளி கிழங்கு செடிகள் பசுமையாக வளர்ச்சி கண்டு வருகிறது. மேலும் மழை தொடர்ந்தால் கிழங்குகள் நல்ல ஊக்கத்துடன் வளர்ச்சி அடையும் என விவசாயிகள் கூறினர்.