/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன், கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
/
மாரியம்மன், கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
மாரியம்மன், கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
மாரியம்மன், கணபதி கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
ADDED : செப் 05, 2025 01:00 AM
குளித்தலை, கழுகூரில் மாரியம்மன், கணபதி கோவில் கும்பாபி ேஷம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.குளித்தலை அடுத்த, கழுகூர் பஞ்.. மேல கம்பேஸ்வரம் கிராமத்தில் மகா மாரியம்மன், கணபதி ஆகிய பரிவார தெய்வங்கள் அடங்கிய கோவில், புனரமைத்து கும்பாபிஷேகம் செய்ய கிராம மக்கள் முடிவு செய்தனர். இதையடுத்து கடந்த, 2 காலை குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள், கிராம மக்கள் மேள தாளங்கள் முழங்க, முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக புனித நீர் எடுத்து வரப்பட்டது.
நேற்று முன்தினம் மங்கள இசையுடன், விநாயகர் வழிபாடு, முதல் கால பூஜை நடைபெற்றது, நேற்று காலை கோமாதா பூஜை நடந்தது. பின் கோபுர கலசத்தில், சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க, கோபுர கலசத்திற்கு புனித
நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது,
அதை தொடர்ந்து மூலவர் மகா மாரியம்மன், கணபதி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. விழாக்குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. குளித்தலை, தோகைமலை, பஞ்சப்பட்டி, கொசூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பக்தர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.