/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவில் விழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்
/
மாரியம்மன் கோவில் விழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்
மாரியம்மன் கோவில் விழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்
மாரியம்மன் கோவில் விழா: பூக்குழி இறங்கிய பக்தர்கள்
ADDED : ஜூன் 25, 2025 02:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குளித்தலை, குளித்தலை அடுத்த வைகை நல்லுார் பஞ்., தாளியாம்பட்டியில் மகா மாரியம்மன், காளியம்மன், பகவதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திரு
விழாவையொட்டி, கடந்த, 22ல் தீர்த்தக்குடம், பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். நேற்று மதியம், பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் விரதமிருந்த பக்தர்கள் கரகம் ஏந்தி, மேளதாளம் முழங்க கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பின், பூக்குழி இறங்கி வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று, மஞ்சள் நீராடுதலுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.