/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருதுார் பால் உற்பத்தியாளர் சங்கம், காலை உணவு திட்டப்பணிகள் ஆய்வு
/
மருதுார் பால் உற்பத்தியாளர் சங்கம், காலை உணவு திட்டப்பணிகள் ஆய்வு
மருதுார் பால் உற்பத்தியாளர் சங்கம், காலை உணவு திட்டப்பணிகள் ஆய்வு
மருதுார் பால் உற்பத்தியாளர் சங்கம், காலை உணவு திட்டப்பணிகள் ஆய்வு
ADDED : ஆக 23, 2024 04:40 AM
குளித்தலை: குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., கருங்கல்பட்டியில் செயல்பட்டு வரும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தை, நேற்று உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட கலெக்டர் தங்க வேல் ஆய்வு செய்தார்.
கருங்கல்பட்டி, கரும்பாறைப்பட்டி, இ.புதுாரை சேர்ந்த, 225 உறுப்பினர்களை கொண்டு விவசாயிகள் தினமும், 2,150 லிட்டர் பால் உற்பத்தி செய்து வழங்கி வருகின்றனர். விவசாயிகள் வழங்கும் பாலுக்கு உரிய தொகை வழங்கப்பட்டு வருகிறதா, பால் தரமாக இருக்கிறதா, என்பதை கலெக்டர் ஆய்வு செய்து, விவசாயிகளிடம் கால்நடை வளர்ப்புக்கான கடன் வசதி மற்றும் சங்கத்திற்கு தேவையான வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
அப்போது, 'கால்நடைகளுக்கு பாதிப்பு ஏற்படும்போது உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் பாதிப்படைகிறோம். எங்கள் பகுதிக்கு கால்நடை மருந்தகம் வேண்டும்' என கோரிக்கை விடுத்தனர். பின், பால் உற்பத்தியாளர் சங்க கட்டடம் வளாகம் அருகே கலெக்டர் தங்கவேல் மரக்கன்றுகளை நட்டார்.ஆய்வின்போது ஆவின் மேலாளர் டாக்டர் முருகன், பால்வளம் துணை பதிவாளர் கணேசன், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க செயலாளர் முருகேசன். கவுன்சிலர் முருகேசன், தாசில்தார் சுரேஷ், ஆர்.ஐ.,ஸ்ரீவித்யா உடனிருந்தனர்.
பின், கடம்பர்கோவில் யூனியன் நடுநிலைப் பள்ளியில், உணவு கூடத்தை ஆய்வு செய்தார். பின், காலை உணவு திட்டத்தில் பள்ளி மாணவர்களுடன் கலெக்டர் அமர்ந்து உணவு அருந்தினார்.