/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வங்கிக்கு பணம் எடுக்க சென்ற மாணவி மாயம்
/
வங்கிக்கு பணம் எடுக்க சென்ற மாணவி மாயம்
ADDED : மே 24, 2024 06:49 AM
குளித்தலை : குளித்தலை அடுத்த, பொருந்தலுார் பஞ்., சின்ன ரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி, 52.
கூலி தொழிலாளி, இவரது, 15 வயது மகள் அரசு பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வில் கணிதம் பாடத்தில் தோல்வியுற்றார். விரக்தியில் இருந்த அவர் கடந்த, 20 காலை, 11:00 மணியளவில் கல்வி உதவித்தொகை, 4,000 ரூபாய் தோகைமலை அரசு வங்கியில் இருப்பதாகவும். அதனை எடுத்து வருவதாக கூறி வங்கி புத்தகம், ஆதார் அட்டை, பள்ளி சான்றிதழ் ஆகியற்றுடன் சென்றார்.வெகு நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது தந்தை கொடுத்த புகார்படி, தோகைமலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.