ADDED : ஜன 02, 2026 04:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: கரூர் மாவட்டம், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மரவாபாளையம் சுற்றுவட்டார பகுதிகளில், அரசு ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர்கள், சுகாதார தன்னார்வ-லர்கள் கொண்ட குழுவினர் சிறப்பு மருத்துவ முகாமை நடத்-தினர்.
அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று வீட்டில் இருந்த முதியவர்கள், பாலுாட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல-ருக்கும் மருத்துவ பரிசோதனை செய்தனர். சர்க்கரை அளவு, ரத்த அழுத்த அளவு உள்பட பல்வேறு பரிசோதனைகளை செய்தனர். அவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகளை வழங்கி, பொது மக்-களுக்கு நோய் பரவுவதற்கான காரணம் குறித்தும், நோய் பர-வாமல் தடுப்பதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர்.

