/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 22, 2024 01:41 AM
மருத்துவ ஆய்வக நுட்புனர்
சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கரூர், நவ. 22-
கரூர், அரசு மருத்துவ கல்லுாரி வளாகம் முன், தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட தலைவர் மோகன் ராஜ் தலைமை வகித்தார். தமிழக அரசின் அனைத்து மருத்துவ கல்லுாரி மருத்துவமனைகள், மாவட்ட, -வட்ட மருத்துவமனைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். 11 புதிய அரசு மருத்துவக் கல்லுாரியில் அவுட்சோர்சிங் முறையில் ஆய்வக நுட்புனர்களை நியமனம் செய்யும்முறையை கைவிட வேண்டும். அதற்கு பதிலாக அங்கு, 500 நிரந்தர பணியிடங்களை உருவாக்க வேண்டும் உள்பட, 20 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைத் தலைவர்கள், சுரேஷ், முத்து மாரி, மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராம் உள்பட பலர் பங்கேற்றனர்.