/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் மருத்துவத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
/
கரூரில் மருத்துவத்துறை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 15, 2024 02:12 AM
கரூரில் மருத்துவத்துறை
பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர், நவ. 15-
கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், தமிழ்நாடு மருத்துவத்துறை பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்புனர் சங்க மாவட்ட செயலாளர் சுப்ரமணியன் தலைமை வகித்தார். சென்னை, கிண்டி அரசு மருத்துவமனையில் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டிருந்த டாக்டர் பாலாஜி, ஒரு நோயாளியின் மகனால் கத்தியால் சரமாரியாக குத்தப்பட்டுள்ளார். சம்பந்தப்பட்டவர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அனைத்து மருந்தாளுனர் சங்க மாவட்ட தலைவர் பிரேம்குமார், மருத்துவ துறை நிர்வாக ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் கண்ணன், தி ரேடியாலஜிக்கல் அசிஸ்டென்ட் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஜெயராம் உள்பட பலர் பங்கேற்றனர்.