/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
27 முதல்வர் மருந்தகங்களில்ரூ.3.58 லட்சத்துக்கு மருந்து விற்பனை
/
27 முதல்வர் மருந்தகங்களில்ரூ.3.58 லட்சத்துக்கு மருந்து விற்பனை
27 முதல்வர் மருந்தகங்களில்ரூ.3.58 லட்சத்துக்கு மருந்து விற்பனை
27 முதல்வர் மருந்தகங்களில்ரூ.3.58 லட்சத்துக்கு மருந்து விற்பனை
ADDED : ஏப் 18, 2025 01:14 AM
கரூர்:கரூர் மாவட்டத்தில், 27 முதல்வர் மருந்தகங்கள் மூலம், 7,778 பேருக்கு, 3.58 லட்சம் ரூபாய் மருந்துகள் விற்பனையாகியுள்ளது என கலெக்டர் தங்கவேல் தெரிவித்தார். கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் சிந்தலவாடியில் உள்ள முதல்வர் மருந்தகத்தை, கலெக்டர் தங்கவேல் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது, அவர் கூறியதாவது: முதல்வர் மருந்தகங்களுக்கு தேவையான ஜெனரிக் மருந்துகள், தமிழ்நாடு மருந்து பணிகள் கழகம் மூலம் கொள்முதல், பிற மருந்துகள் தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையம் மூலம் கொள்முதல் செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளுக்கு, செல்லும் மக்களுக்கு அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற பாதிப்புக்கு ஆளாகியிருக்க கூடியவர்களுக்கு, மருந்துகளை குறைந்த விலையில் முதல்வர் மருந்தகங்களிலேயே வாங்கி பயன்பெற முடியும். மாவட்டத்தில் உள்ள, 27 முதல்வர் மருந்தகங்கள் மூலம், 7,778 பேருக்கு, 3.58 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருந்துகள் விற்பனையாகியுள்ளது.
இவ்வாறு கூறினார்.
கூட்டுறவுத்துறை துணை பதிவாளர் ஆறுமுகம் உள்பட பலர் பங்கேற்றனர்.