/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்்
/
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்்
ADDED : நவ 28, 2025 01:38 AM
குளித்தலை, தோகைமலை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், 25 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது
குளித்தலை அடுத்த தோகைமலையில், மலைமேல் மீனாட்சி சுந்த
ரேஸ்வரர், பாலதண்டாயுதபாணி கோவில் அமைந்துள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இக்கோவிலில், கும்பாபிஷேக விழா நடத்துவது என்று கந்த சஷ்டி 10 மண்டக படிதாரர்கள். ஊர் பொதுமக்கள், முருக பக்தர்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
இப்பணி நிறைவடைந்ததையடுத்து கடந்த, 25ல் குளித்தலை காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வரப்பட்டது. அப்போது யானை, குதிரை, ஒட்டகம் ஊர்வலம் நடந்தது. தொடர்ந்து பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர்.
புனிதநீர் அடங்கிய கும்பத்தை, சிவாச்சாரியார்கள் யாக வேள்வியில் வைத்து விக்னேஷ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, நவக்கிரக யாகம் உள்ளிட்ட 4 கால யாக வேள்வி பூஜைகளை செய்தனர். பின்னர் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க புனிதநீரை கலசத்திற்கு ஊற்றினர். தொடர்ந்து மூலவர் தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் மீது புனிதநீர் தெளிக்கப்பட்டது.
விழா கமிட்டி சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.

