/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூர் மாநகராட்சியில் நியமன கவுன்சிலர் பதவியேற்பு
/
கரூர் மாநகராட்சியில் நியமன கவுன்சிலர் பதவியேற்பு
ADDED : நவ 28, 2025 01:39 AM
கரூர்,தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கு நியமன கவுன்சிலர் பதவி அளிக்க அரசு உத்தர
விட்டுள்ளது. இவர்கள், தேர்தலில் போட்டியிடாமல் நியமன முறையில் உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சியில் பதவி பெறும் வகையில், சட்டசபையில் மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது.
தற்போது, அனைத்து மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் தலா ஒரு தகுதியான (40 சதவீதம் மாற்றுத்திறன் கொண்டவர்) மாற்றுத்திறனாளி நபருக்கு, நியமன கவுன்சிலர் பதவி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, மாற்றுத்திறனாளிகள் தகுதி சான்றிதழ் பெற்று விண்ணப்பிக்க
வேண்டும். அதனை, மாவட்ட கலெக்டர் தலைமையில் குழு விண்ணப்பித்தை பரிசீலித்து தேர்வு செய்ய வேண்டும்.
இதன்படி, கரூர் திருமாநிலையூரை சேர்ந்த கருணாநிதி என்பவர், மாநகராட்சி கவுன்சிலராக தேர்வு செய்யப்பட்டார். கரூர் மாநகராட்சி கூட்டரங்கில், கமிஷனர் சுதா முன்னிலையில், நியமன கவுன்சிலர் கருணாநிதி பதவியேற்று கொண்டார்.
மேயர் கவிதா, துணை மேயர் தாரணி சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.
* கரூர் மாவட்டம், புஞ்சை தோட்டக்குறிச்சி டவுன் பஞ்., நியமன கவுன்சிலராக அர்ஜூனன், செயல் அலுவலர் (பொ) செல்வராஜ் முன்னிலையில் பதவியேற்று கொண்டார்.

