/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
'ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'
/
'ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'
'ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'
'ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்'
ADDED : நவ 28, 2025 01:40 AM
கரூர், ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து, 2012ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.
இது குறித்து, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில தலைவர் மலைக்கொழுந்தன், பிரதமர் மோடிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது: கடந்த, 2011 நவ., 15க்கு முன் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும், தகுதி தேர்வில் தேர்ச்சி அவசியம் என கடந்த, செப்.,1ல், பல்வேறு மாநிலங்களின் ஆசிரியர் தகுதி தேர்வு சார்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
இது, 2012ம் ஆண்டுக்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இந்த ஆசிரியர்கள் தங்களது பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதி தேர்வு அவசியம் என்ற நிலை மன உளைச்சலை ஏற்படுத்தி
யுள்ளது.
எனவே, பிரதமர் மோடி இப்பிரச்னையில் தலையிட்டு ஆசிரியர்களை காப்பாற்ற வேண்டும். இது சார்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்வது மற்றும் லோக்சபாவில் நடப்பு கூட்டத்தொடரிலேயே சட்ட திருத்தம் கொண்டு வந்து, ஆசிரியர் தகுதி தேர்வில் இருந்து, 2012ம் ஆண்டுக்கு முன்பு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
ராகவேந்திரா

