/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் இன்று அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
/
கரூரில் இன்று அ.தி.மு.க., செயல் வீரர்கள் கூட்டம்
ADDED : நவ 10, 2024 01:25 AM
கரூரில் இன்று அ.தி.மு.க.,
செயல் வீரர்கள் கூட்டம்
கரூர், நவ. 10-
கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் செயல் வீரர்கள், வீராங்கனைகள் கூட்டம் இன்று (10 ல்) நடக்கிறது என, மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
கரூர் மாவட்ட, அ.தி.மு.க., சார்பில் இன்று காலை, 9:30 மணிக்கு கரூர் பிரேம் மஹாலில் செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில், அ.தி.மு.க., தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வேலுமணி பேசுகிறார்.
அதைதொடர்ந்து மாலை, 4:00 மணிக்கு, கரூர் மாநகர அ.தி.மு.க., சார்பில் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அதில், மாநில அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி பேசுகிறார். இரண்டு ஆலோசனை கூட்டங்களிலும், கரூர் மாநகர நிர்வாகிகள், கரூர், தான்தோன்றிமலை ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.