ADDED : அக் 05, 2024 01:06 AM
மனநலம் பாதித்த வாலிபர் மீட்பு
குளித்தலை, அக். 5-
குளித்தலை அடுத்த, தோகைமலை கடைவீதியில், 25 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர், உணவு கிடைக்காமலும், பாதுகாப்பு இல்லாமலும் வீதிகளில் சுற்றி திரிந்து வந்தார்.
கடந்த, 10 நாட்களாக உணவு, தண்ணீர் இல்லாமல் சுற்றித்திரிந்தவரை மீட்டு உணவு, சிகிச்சை மற்றும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் தோகைமலை இன்ஸ்பெக்டர் ஜெயராமன், சாந்திவனம் மனநல காப்பகம் இயக்குனர் அரசப்பனிடம் கேட்டுக்கொண்டனர். இதையடுத்து, சுற்றி திரிந்தவரை சாந்திவனம் மனநல காப்பக ஒருங்கிணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, மேற்பார்வையாளர் வேல்முருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் மீட்டு, திருச்சி தில்லை நகரில் உள்ள ஆத்மா மனநல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் காப்பகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது