/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பால் பதப்படுத்தும் ஆலை தொடங்க அனுமதிக்க கூடாது; கலெக்டரிடம் மனு
/
பால் பதப்படுத்தும் ஆலை தொடங்க அனுமதிக்க கூடாது; கலெக்டரிடம் மனு
பால் பதப்படுத்தும் ஆலை தொடங்க அனுமதிக்க கூடாது; கலெக்டரிடம் மனு
பால் பதப்படுத்தும் ஆலை தொடங்க அனுமதிக்க கூடாது; கலெக்டரிடம் மனு
ADDED : ஆக 19, 2025 01:13 AM
கரூர், சுற்றுச்சூழல் மாசு ஏற்படும் என்பதால், பால் பதப்படுத்தும் ஆலை தொடங்க அனுமதிக்கக் கூடாது என, சி.கூடலுார் கிராம மக்கள், கரூர் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதில், கூறியிருப்பதாவது: க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, சி.கூடலுார் கீழ்பாகத்திற்குப்பட்ட கைலாசபுரத்தில், தனியார் பால் பதப்படுத்தும் ஆலைக்கான கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. ஆலைக்கு உரிய அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. இங்கு பெரிய துாண்கள், தொட்டி ஆகிய கட்டுமான பணிகளுக்கு குழி தோண்டுவதற்கு வெடி வைத்து தகர்க்கப்படுகிறது.
இதில், பொதுமக்கள் மட்டுமின்றி, கால்நடைகளும் மிரண்டு போய் உள்ளன.கடந்த, மே 1, ஆக.,15 ல் நடந்த கிராம சபை கூட்டத்தில், இந்த ஆலைக்கு அனுமதி வழங்க கூடாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த பால் பதப்படுத்தும் ஆலை ரசாயன பொருட்களை பயன்படுத்தும் வாய்ப்பு அதிகம் உள்ளது. இதனால், வெளியேறும் ரசாயனம் கலந்த கழிவுநீர், நிலத்தடிநீரை பெரிதும் மாசுபடுத்தும். விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும். இப்பகுதி சுற்றுச்சூழல் மாசுபாட்டை தவிர்க்க, பால் பதப்படுத்தும் ஆலை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது.
இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.

