/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
ரூ.110 கோடியில் கரூர் - கோவை நான்கு வழி சாலை பணி அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
/
ரூ.110 கோடியில் கரூர் - கோவை நான்கு வழி சாலை பணி அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
ரூ.110 கோடியில் கரூர் - கோவை நான்கு வழி சாலை பணி அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
ரூ.110 கோடியில் கரூர் - கோவை நான்கு வழி சாலை பணி அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
ADDED : டிச 29, 2024 01:23 AM
ரூ.110 கோடியில் கரூர் - கோவை நான்கு வழி சாலை பணி
அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்
கரூர், டிச. 29-
''கரூர்--கோவை சாலை, நான்கு வழிச் சாலையாக மாற்றுவதற்கான, 110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் நடக்கிறது,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.
அரவக்குறிச்சி தொகுதிக்குட்பட்ட புஞ்சைதோட்டக்குறிச்சி டவுன் பஞ்., உள்ள தளவாபாளையம், குப்பம், நஞ்சைக்காளக்குறிச்சி, ஆலமரத்துப்பட்டி, ஈசநத்தம் ஆகிய பஞ்சாயத்துகளில், கரூர் கலெக்டர் தங்கவேல் தலைமையில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.
மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: கரூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டசபை தொகுதிகளில் குறைந்தது, 5 இடங்கள் என தேர்வு செய்யப்பட்டு, 4 தொகுதிகளில், 20 இடங்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்டத்தில் வேலை வாய்பை உருவாக்கும் வகையில், 200 ஏக்கர் பரப்பளவில் சிப்காட் நிறுவனம் மற்றும் ஐ.டி,பார்க் அமைக்கப்பட உள்ளது.
கரூர் மாவட்டத்தில், 2024--25ம் ஆண்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் மூலம் பயனாளிகளுக்கு, 749 வீடுகள் கட்டித் தரப்பட உள்ளது. கிராமப்புறங்களில் குடிசை வீட்டில் வாழ்பவர்களுக்கு வீடுகள் பராமரிப்பு செய்வதற்காக வீடுகள் பராமரிப்பு செய்யும் திட்டத்தில், 2,900 பயனாளிகளுக்கு வீடு பராமரிப்பு செய்வதற்கான நிதி வழங்கப்பட்டுள்ளது.
கரூர்--கோவை சாலையை நான்கு வழிச் சாலையாக மாற்ற, 110 கோடி நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகள் நடக்கிறது.
இவ்வாறு பேசினார்.
ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது: தமிழகத்தில் முதன்முறையாக பொதுமக்களை சந்தித்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ளது. மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதிதிராவிட மக்களுக்காக எண்ணற்ற திட்டங்களை செயல்படுத்தப்படுகிறது.
இவ்வாறு பேசினார்.
எம்.எல்.ஏ.,க்கள் மாணிக்கம், இளங்கோ, சிவகாமசுந்தரி, ஆர்.டி.ஓ., முகமதுபைசல், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

